திருவிளக்கை குளிரச் செய்ய பூவில் பாலைத் தொட்டு குளிர வைக்கும் வழக்கம் இருக்கிறது. சிலர் அரிசியை விளக்கின் எண்ணெய்க்குள் சிறிது வைத்து விட்டு, பிறகு பூவினால் குளிரச் செய்வர். எண்ணெய் தீர்ந்து போய் தானாக விளக்கை குளிரச் செய்யும் பழக்கமும் உண்டு. ஆனால், பூஜைக்குப் பயன்படுத்திய பூவினால் தீபத்தை குளிரச் செய்வதே சரியான நடைமுறை. எக்காரணம் கொண்டும், விளக்கை வாயினால் ஊதி அணைப்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.