இளைய தளபதி விஜய் எப்போதும் மிகவும் அமைதியாக தான் இருப்பார். இவர் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர், அதை நடிகர் சதீஷிடம் சமீபத்தில் கூறியுள்ளார்.
இதை சதீஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார், இதில் ‘விஜய் சாருடன் ஒரு நாள் காரில் நீண்ட பயணம் செய்தேன்.
அப்போது அவர் நமக்கு ஒரு பிரச்சனை என்றால், நண்பன், சொந்தம் வருவது சாதாரணம்.
ஆனால், நமக்கு ஒன்று என்றால் துடிச்சு போறாங்க ரசிகர்கள், அவர்களுக்கும் எனக்கும் எந்த இரத்த சம்மந்தமும் இல்லை.
அப்படியிருக்க அவர்கள் எனக்காக இத்தனை செய்வது நான் என்ன செய்தாலும் ஈடாகாது’ என விஜய் கூறினார் என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.