யுவதியை திருமணம் முடிப்பதாக ஏமாற்றிய போலி வைத்தியர் கைது!

நரம்பியல் மருத்துவர் எனக் கூறி கண்டியில் அரச நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வரும் யுவதியை ஏமாற்றி பல இலட்சத்தை சுருட்டிய  போலி வைத்தியரை பொரஐள பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது

மணமகள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தி தென் மாகாணத்தை இவர்  தன்னை மருத்துவராக காட்டி யுவதியின் பெற்றோருடன் பேசி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் யுவதியை பெண் பார்க்க கார் ஒன்றில் யுவதியின் வீட்டுக்கு வாடகை காரில் சென்றுள்ள இவர் கார் சாரதியிடம் தன்னை டொக்டர் என அடிக்கடி அழைக்குமாறும்  கூறியுள்ளார்.

இவரின்  பெயரில் தென் பகுதியில் ஒரு மருத்துவர் இருப்பதால், யுவதியும் அவரது பெற்றோரும் இந்த நபரிடம் ஏமாந்துள்ளனர்.

சந்தேக நபர் போலி மருத்துவர் என்பதை அறிந்து கொண்ட யுவதி, அந்த நபருடன் தொடர்புகளை துண்டித்ததால், கோபமடைந்து 10 இலட்சம் ரூபா பணத்தை கேட்டு யுவதியை அச்சுறுத்தியுள்ளார்.

யுவதி இது சம்பந்தமாக பொரளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக  போலி வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.