பத்திரிகையாளர் பாதுகாப்பு குழுவினால் (CPJ) 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பாதிப்பு ஏற்படுகின்றமை தொடர்பான சுட்டெணில் இருந்து முதல் முறையாக இலங்கையின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி வெளியிடப்படுகின்றது. உயிரிழந்தோரின் தினமாக கருதப்படும் அன்று பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பிலான சர்வதேச தினமாக பெயரிப்படும். கடந்த பல வருடங்களாக இலங்கை இந்த சுட்டெணில் நான்காவது இடத்தை பிடித்து வந்தன.
கடந்த 10 வருட காலப்பகுதியினுள் பாத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு இந்த சுட்டெணில் கணக்கிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு சுட்டெணிற்காக 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியின் தீர்க்கப்படாத ஐந்து கொலைகள் அல்லது அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்பட்ட கொலைகளின் எண்ணிக்கைகளை கொண்ட நாடுகளே சுட்டெணில் உள்ளடக்கப்படும். கடந்த முறை 14 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் இம்முறை 13 நாடுகளே உள்ளடக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 72 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் 31 வீத கொலைகள் பணியின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுட்டெணில் முதலாவது இடத்தை இரண்டாவது முறையாகவும் சோமாலியா பெற்றுக் கொண்டுள்ளது. அங்கு ஊடகவியலாளர்கள் அதிகளவில் அல் – ஷபாப் படையினரால் கொலை செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்தை சிரியா மற்றும் ஈராக் நாடுகள் பெற்றுள்ளன.ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த சுட்டெணில் தொடர்ந்து இரண்டு முறை இடம்பிடித்துள்ளது.
இலங்கை உட்பட 9 நாடுகள் 2008ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்த சுட்டெணில் தொடர்ந்து உள்ளடக்கப்பட்டு வந்தன. இலங்கை தற்போது நீக்கப்பட்டுள்ளமையினால் அதன் எண்ணிக்கை எட்டாக காணப்படுகின்றது.