உலக பிரபலம் தசாவதார நடிகரிடமிருந்து மூன்றாவது மனைவி பிரிந்தது தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்த விஷயம். பல விஷயங்கள், பல காரணங்கள் என பாதிக்கப்பட்ட மனைவி வெளியே சொல்லமுடியாமல் தவித்திருக்கிறார்.
எப்போது இணை பிரியாத இவர்கள் எங்கும் பார்த்தாலும் ஜோடியாகத்தான் இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் இப்படியானது எல்லோருக்கும் அதிர்ச்சியே. பிரிவிற்கு காரணம் அப்படியென்ன என பலரும் தூண்ட ஆரம்பித்து விட்டார்கள்.
இதில் சில மாத காலமாகவே இரண்டாவது மனைவியின் மகளான இசைமயமான நடிகைக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் நேர் மோதல் நிறைய நடந்தது என்றே சொல்லப்படுகிறது. இதில் மூன்றாவது மனைவி ஒரு பக்கம் பல அவமானங்களை மறைமுகமாகவே சந்தித்தாராம்.
பிரச்னையை சரிசெய்ய உலகநாயகமே களமிறங்கியபோதும் ஏதும் செய்ய முடியாமல் முற்றிப்போக கடைசியில் அவர் பிரியா சினேகிதியை பிரிந்து போகச்சொல்லிவிட்டாராம்.