இச்செய்தி பலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம்.ஆனால் உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.இது தர்மத்தின் நியதி.
சுட்டுக்கொன்றவர் சந்தனகுமார.
அவரது வாக்கு மூலம்-
இரவு ஏறக்குறைய 11.30 மணியளவில் கே.கே.எஸ் வீதியில் இரவு கடைமைக்காக நின்றிருந்தோம்.
அப்போது இரண்டுபேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை நிறுத்துமாறு சைகை காட்டினோம்.எனினும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை.
இதனால் எமது ஜீப்பில் அவர்களை துரத்தி சென்று எ.கே 47 துப்பாக்கி மூலம் சுட்டேன்.
இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் கட்டுப்பாட்டை இழந்ததுடன் மோட்டார் சைக்கிள் அருகிலிருந்த மதிலுடன் மோதியது.
படுகாயமடைந்திருந்த இருவரையும் எமது ஜீப்பில் ஏற்றி வைத்தியசாலையில் அனுமதித்தோம்.
இதற்கு மேலாக மிகவும் கேலிக்குரிய விடயமாக சிறி(பெயர்மாற்றம்) எனப்படும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் சிஐடிக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதில், தான் நாச்சிமார் கோவிலடியில் கடைமையில் இருந்ததாகவும் இரவு 11 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வேகமாக சென்றதாகவும் அதன் பின்னால் பொலிஸ் ஜீப் ஒன்று அவர்களை துரத்தி சென்றதையும் தான் கண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
(மேலும் பல ஆத்திரமூட்டும் வாக்கு மூலங்கள் இன ஒற்றுமை கருதி இங்கு பிரசுரிக்கப்படவில்லை)
மேற்கூறப்பட்ட சிஐடியினரின் வாக்கு மூலப்படி விசாரணைகள் இடம்பெற்றால் மாணவர்களை சுட்டுக்கொன்ற ஐவரும் குறைந்தது ஆறு மாதங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள்.
இங்கு ஒரு சாதாரண குடிமகனுக்கு எழும் கேள்விகள்
மாணவர்களை துரத்தி சென்று சுட்டிருந்தால் துப்பாக்கி குண்டின் உள்நுழைவு (Entrance mark of bullet) பகுதி எவ்வாறு உடலின் முன்பகுதியில் இருக்கும்?
வீதியில் வைத்து சுட்டிருந்தால் மாணவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எவ்வாறு ஒரு ஒழுங்கைக்குள் சென்று முறைப்படி விழுந்து கிடந்தது?
ஜீப் யாழ்ப்பாண பகுதியில் இருந்து சென்றதாக வாக்கு மூலம் கொடுத்தவர் எதற்காக இந்த வழக்கில் உள்வாங்கப்பட்டார்??
மனித மிருகங்கள் வழக்கின் வடிவத்தை மாற்றிக்கொண்டிருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளாத அளவிற்கு முட்டாள்கள் இல்லை என்பது தான் நிஜம்.