சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேதப் பரிசோதனைகள் பூர்த்தியாகியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
லசந்தவின் சடலம் அண்மையில் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் ஊடாக லசந்த கொலை தொடர்பிலான முக்கிய விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சடலம், மீளவும் நல்லடக்கம் செய்ய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லசந்தவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் அத்திடிய பிரதேசத்தில் வைத்து லசந்த கொலை செய்யப்பட்டிருந்தார்.