அல்சரால் அவதியா? இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கே!

இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்).

குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.

அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.

பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.

குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.

குடல் புண்ணுக்கான அறிகுறிகள்

  • வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி
  • நெஞ்செரிச்சல்
  • வயிறு வீங்குதல்
  • பசியின்மை, உடல் எடை குறைதல்
  • வாந்தி, குமட்டல், வாயுக்கோளாறு

இதனைக் குணப்படுத்த இயற்கை குணங்கள் நிறைந்த கிராமத்து வைத்தியங்கள் இதோ

 

தேங்காய் பால்

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாப்பிடும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் விரைவில் வயிற்றுப்புண் குணமாகிவிடும்.

பிரட் மற்றும் வெண்ணெய்

அல்சரால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால், காலையில் பிரட் மற்றும் வெண்ணெய்யை சாப்பிட வேண்டும்.

ஆப்பிள் ஜூஸ்

தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் குடித்து வருந்தால் அல்சரால் ஏற்படும் கடுமையான வலிகள் இருக்காது.

வேப்பிலை

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிதளவு கொழுந்து வேப்பிலையை சாப்பிட்டால், அல்சருடன் வயிற்று பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

முட்டைக்கோஸ்

அல்சர் உள்ளவர்கள், தினமும் தங்களின் அன்றாட உணவில் முட்டைக்கோஸை சேர்த்து வந்தால், விரைவில் அல்சர் குணமாகிவிடும்.

அகத்திக்கீரை

தினமும் ஒரு கப் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வேக வைக்காமல் பச்சையாக உட்கொண்டு வந்தால், அல்சர் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வெங்காயம்

பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட்டால், அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டை ஜூஸ் செய்து, அதனுடன் சிறிது தேன் கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

பாகற்காய்

அல்சர் உள்ளவர்கள், பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து, தினமும் 1 டீஸ்பூன் அளவு பொடியை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உணவில் சேர்த்துக் கொண்டால் விரைவில் அல்சர் குணமாகும்.