5-ந்தேதி(இன்று) அப்துல்கலாமின் அண்ணன் மரைக்காயரின் 100-வது பிறந்தநாள் ஆகும். தன்னுடைய அண்ணனின் 100-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது அப்துல்கலாமின் கடைசி விருப்பம் ஆகும். அதன்படி மரைக்காயர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* 100 சிறந்த நபர்களுக்கு அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கப்படுகிறது. முதல் 5 பேருக்கு மரைக்காயர் தனது கையால் விருது வழங்க உள்ளார்.
* தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் அப்துல்கலாம் நூலகம் திறக்கப்படுகிறது.
* நடிகர் விவேக் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்குகிறார். முதல் 100 மரக்கன்றுகளை அப்துல்கலாம் நினைவிடத்தை சுற்றி அவர் நடுகிறார்.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பயிலும் 100 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
* ராமேசுவரம் பகுதி மீனவ குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு அப்துல்கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.