பிரபல நடிகையும் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியும் ரோஹினி, கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக அதாவது நயன்தாராவுக்கு மாமியாராக நடிக்கின்றார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளார். இந்த படத்தில் மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கவுள்ளார்.
ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம்,ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், ரோகினி, ஸ்நேகா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.