2016-ஆம் ஆண்டில் இசைத் துறையில் அதிகம் சம்பாதித்த பெண் கலைஞர் என்ற பெருமையைப் பிரபல பாடகி யான டெய்லர் ஸ்விப்ட் பெற்றுள்ளார். கடந்த 2014 ஆண்டுக்குப் பின்னர் இதுவரை அவர் எந்தவொரு பாடல் தொகுப்பையும் வெளியிடவில்லை இவ்வாண்டில் ஒரேயொரு இசை நிகழ்ச்சியை மட்டுமே நடத்தினார்.
இருப்பினும், அவர் தான் இந்த ஆண்டில் அதிக வருமானத்தை ஈட்டியவராகத் திகழ்கிறார் என ஃபோர்பெஸ் சஞ்சிகையின் தகவல் கூறுகிறது. இவ்வாண்டில் அவர் 170 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் பெற்றுள்ளார். அவரை அடுத்து இரண்டாவது இடத்தைப் பாடகி அடெலி பிடித்தார். இவர் 80 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் மடோனா 76 மில்லி யன் டாலர் வருமானம் பெற்றுள்ளார்.
26 வயதுடைய டெய்லர் ஸ்விப்ட், 2014இல் வெளியிட்ட பாடல் தொகுப்பான “1989” என்ற இசை ஆல்பம் தொடர்பில் அவர் மேற்கொ ண்ட உலக இசை நிகழ்ச்சிப் பயணம் தான் அவருக்கு கணிசமான வருமானத்தை கொடுத்த வண்ணம் உள்ளது.
மேலும், அவருக்கு விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானம் குவிகிறது. குறிப்பாக, டயட் கோக், மற்றும் கெட்ஸ்-ஆப்பிள் போன்ற காலணி விளம்பரங்களே அவருக்கு வருமானம் தந்து வருகின்றன.