காரசாரமான மிளகு சீரக இட்லி செய்வது எப்படி

உப்பு, காரம், புளிப்பு சேர்ந்து செய்யக்கூடிய ஒரு அருமையான டிபன் செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 2 கப்,
பெரிய வெங்காயம் – 1,
கறிவேப்பிலை – சிறிது,
கெட்டியான புளிச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்.

அரைக்க:

மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 3 பல்.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

* இட்லி மாவை, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

* மிக்சியில் மிளகு, சீரகத்தை நன்றாக அரைத்து, எடுக்கும் போது பூண்டை உரித்து, அதனுடன் சேர்த்து நசுக்கிக்கொள்ளுங்கள்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* அத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மிளகு, சீரகம், பூண்டுக் கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி புளிச்சாறு, இட்லி, கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

* உப்பு, காரம், புளிப்பு சேர்ந்து சப்புக் கொட்ட வைக்கும் இட்லி இது.