ஆத்தூரைச் சேர்ந்த கனகவல்லி என்பவர்.. சென்னையில் அந்த சக்தி மிக்க ஒரு பணக்காரக் குடும்பத்தில் சமையல் வேலை செய்வதற்கு வந்து சேர்ந்தார்.
கணவன் குடித்து குடித்து செத்துப் போனான். ஒரு மகள், ஒருவனை காதலித்து ஓடி விட்டது. சென்னையில் அந்த வீட்டில் தங்கி வேலை செய்தார்.
இரவு கார் செட்டில் தான் படுக்கை. சமையல் செய்யும் போது அடிக்கடி முதலாளியின் மனைவி வந்து பார்த்து திட்டிக் கொண்டே இருப்பார்.
காலை உணவை பதினோரு மணிக்குத்தான் சாப்பிட வேண்டும். மதியம் மூன்று மணிக்கு. இரவு பதினோரு மணி..
அன்று காலை உறவினர்கள் கூட்டம் வந்து விட்டது.அதனால் கனகவல்லிக்கு உணவு இல்லை.
மதியம் பதினைந்து பேருக்கு சமைத்தார். பசி மயக்கம் தாங்க முடியாத கனகவல்லி யாரும் இல்லை என்கிற தைரியத்தில் கொஞ்சம் தட்டில் போட்டு சாப்பிட்டு விட்டார்.விதி..! முதலாளி உள்ளே வந்து தொலைந்தான்.
நீ சாப்பிட்ட எச்சிய நாங்க சாப்பிடனுமாடி என்று கேட்டு நாய் கட்டும் ரோப் சங்கிலியை எடுத்து வந்து மயக்கம் வரும் வரை அடித்தான். கதறினாள்..கத்தினாள் .காலில் விழுந்து கதறினாள்..மயங்கிப் போனாள் அந்த ஏழைப் பெண்..!
மயக்கம் தெளிய அவளின் துணிப் பையை தூக்கி எறிந்து வெளியே விரட்டினான் அந்த பொறுக்கி நாய். நடு தெருவில் மயங்கி விழுந்தாள் கனகவல்லி.
போலீஸ் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தது..! பிரச்சனை இப்போது பற்றி எரிகிறது…!!