நாய், பூனைகளை தான் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதை பார்த்திப்போம், ஆனால் ஜப்பானில் 34 வருடங்களாக முதலையை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார் முரபயாஷி.
ஆம் 6 அடி 8 அங்குலம் கொண்ட 64 கிலோ எடை உடைய கைமன் முதலை செல்லப்பிராணியை போன்று அவருடன் பழகுகிறது.
இதுகுறித்து முரபயாஷி கூறுகையில், 34 ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் விழாவுக்கு சென்ற போது மிக குட்டியாக இருந்தது.
இதனை பார்த்ததும் எனக்கு பிடித்துப்போகவே, வளர்க்க அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்தேன்.
அரசின் சம்மதம் கிடைக்கவே, வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்தேன்.
34 ஆண்டுகள் வாழும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை, என்னுடைய சைகைகளை புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்தது.
வீட்டில் உணவு கொடுத்தவுடன், பிரஷை வைத்து நானே முதலைக்குப் பல் துலக்கி விடுவேன்.
வீட்டில் இருக்கும்போது சுதந்திரமாக விட்டுவிடுவேன். வெளியில் செல்லும்போது மட்டும் கயிற்றை கட்டி அழைத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.