ஸ்பெயினில் உள்ள கிரான் கனேரியா பகுதியில் உள்ள நீர் விளையாட்டு பூங்காவிற்கு லீஎட்கார் (20) என்ற பெண் அவர் நண்பருடன் விடுமுறை பயணமாக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்த 8 அடி நீளமுள்ள ராக்கி என்றகடல் சிங்கத்துடன் செல்பி எடுக்க முற்பட்டார்
அது மட்டுமில்லாமல் அதன் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்றும் செல்பி எடுக்க முற்பட்டுள்ளர். அப்போது திடீரென கடல் சிங்கத்துடன் திரும்பி அப்பெண்ணின் இடது தொடையை வெறியுடன் கடித்துள்ளது.
இதிலிருந்து மீள முற்பட்டும் அப்பெண்ணால் மீள முடியவில்லை. அங்கிருந்த பணியாளர்கள் சிலர் வந்த பின்னரே அவர் அதனிடம் இருந்து அவரை மீட்டனர்.தன் பின்னர் அவர் அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து எட்கார் கூறுகையில்
ராக்கி யிடம் செல்பி எடுக்க முற்பட்ட போது அது தன்னுடைய முகத்தை கடிக்க வந்ததாகவும் அதன் பின்னர் தான் அதை தள்ளிவிட்டவுடன் தன்னுடைய தொடையை கடித்துவிட்டதாகவும், தொடர்ந்து 5 வினாடிகள் வரை அதுடன் தான் போராடியதாகவும் அதன் பின்னர் பாதுகாவலர்கள் வந்த பின்னரே தான் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.