போதைப் பொருளுக்கு அடிமையாவதை விடவும் மோசமாக இன்று ஐபோனிற்கு அடிமையாகி வருகின்றது மனித குலம். இதற்காக எந்தவொரு ரிஸ்க்கினையும் எடுக்க தயாராக இருக்கின்றார்கள்.
இதே போன்று ஐபோன் மீது கொண்ட காதலால் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் 20 இளைஞர்களை நம்ப வைத்து 20 ஐபோன்களை தன்வசப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஒவ்வொரு ஆண்களையும் காதலித்து அவர்களிடமிருந்து ஐபோன்களை பரிசாக பெற்று பின்னர் ஏமாற்றியுள்ளார். இவ்வாறு ஏமாற்றி வாங்கிய ஐபோன்களை விற்று ஆரம்ப கட்டணமாக செலுத்தி தவணை முறையில் வீடு ஒன்றினை வாங்க முற்பட்டுள்ளார்.
இவர் கையகப்படுத்திய அனைத்து செல்பேசிகளும் iPhone 7 ஆகும். இவற்றின் மொத்த பெறுமதி 17,500 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவரது மோசடி செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.