இன்றைய ராசி பலன் 06-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை  ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலை ச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மகிழ்ச்சியான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில்  முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி  விற்பீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: தன் பலம் பலவீ னத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவு ரையை ஏற்றுக் கொள் வார் கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் ஆதரவுப்  பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு.  வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அமோகமான நாள்.

  • கன்னி

    கன்னி:  குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும்.  நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • துலாம்

    துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பயணங்களால் பயனடைவீர்கள். பழைய  கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடை வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவு கள் எடுப் பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைகளுக்கு  சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனு பவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • தனுசு

    தனுசு:  கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பாராத  இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: ராசிக்குள் சந் திரன் செல்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண் டிருக்காதீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு  வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை குறையும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா  என பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மீனம்

    மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர் கள். வியாபாரத்தில்  வி.ஐ.பிக்கள் வாடிக் கையாளர்களாவார்கள். இனிமையான நாள்.

– See more at: http://astrology.dinakaran.com/rasi-index.asp#sthash.0IaunKjv.dpuf