ஜல்லிக்கட்டு, மண்வாசனை, சூரசம்ஹாரம், வாழ்க்கை போன்ற படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் சித்ரா ராமு உடல் நலக்குறைவால் காலமானர்.
1987-ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. இந்த படத்தில் சிவாஜி, சத்யராஜ் மற்றும் ராதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை சித்ரா ராமு என்பவர் தயாரித்திருந்தார். இவர் தனது தம்பியுடன் இணைந்து மண்வாசனை, சூரசம்ஹாரம் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
அசோக் நகரில் வசித்து வந்த இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.