புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் பழகிய காதல் ஜோடி, நேரில் பார்த்துக்கொண்டவுடன் பிடிக்காமல் பிரிந்துவிட்டனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்(30) என்ற கூலித்தொழிலாளிக்கு பேஸ்புக் மூலம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த திவ்ய(17) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணமான ரமேஷ், அதனை திவ்யாவிடம் மறைத்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் தங்களது புகைப்படத்தை மாற்றிவைத்துள்ளனர்.
வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய இரண்டின் மூலம் சாட் செய்து வந்த இவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர்.
இந்நிலையில், நீ வேலூருக்கு வந்துவிடு, நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என் ரமேஷ் திவ்யாவிடம் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு திவ்யாவும் வேலூருக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற திவ்யாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இருவரும் உடை அடையாளத்தை வைத்து சந்தித்தபோது பேஸ்புக், வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு, ஒருவர் அனுப்பிய படத்துக்கு நேரில் பார்ப்பதற்கும் வேறாக இருந்தது தெரிந்தது.
இதனால் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். வேறு படத்தை அனுப்பி இருவரும் ஏமாற்றியது தெரிந்தது. இதனால் அவர்களுக்குள் பிடிக்காமல் போய்விட்டது. திவ்யா வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டதால் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாது என கூறியுள்ளார்.
அவரை குடியாத்தம் அடுத்த சேத்துவண்டையில் உள்ள தனது நண்பரின் வீட்டில் ரமேஷ் தங்க வைத்தார். குடியாத்தம் டவுன் பொலிசாரின் இளம்பெண்ணை மீட்டு வேலூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.