காடுகளுக்கு சிங்கம், புலி ராஜாக்கள் என்று கருதப்பட்டுவரும் நிலையில், காடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களுக்கு எல்லாம் நமது மூதாதையர்களான குரங்குகளே ராஜாவாகவும், ராணியாகவும் திகழ்ந்து வருகின்றன.
இந்த உண்மை புரியாத ஒரு காட்டு ராஜா, ஒரு மரத்து ராஜாவை விரட்டிச்சென்று மரத்தின் உச்சானி கிளையின்மீது ஏறிவிடுகிறது. புலியின் பாரம் தாளாமல் அந்த கிளை இப்ப விழவா? அப்புறம் விழவா? என்று தலையை ஆட்டி மிரட்டல் விடுக்கும் நிலையில், புலியிடம் இருந்து ‘ஜகாவாங்கிய’ குரங்கு மெலிதான மற்றொரு கிளைக்கு தாவி, பின்னர் லாவகமாக கீழே குதித்து விடுகிறது.
புலியும் அதே பாணியை ‘ஃபாலோ செய்ய’ முயன்று ஓரிரு வினாடி வௌவ்வால் போல தொங்கிவிட்டு ‘தொப்பக்கடீர்’ என்று கீழே விழுந்து ‘வட(குரங்கு)போச்சே) என்று சலித்துக் கொள்கிறது.
சில மாதங்களுக்கு முன்னரே பதிவிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது மீண்டும் ஒருமுறை வலம்வர தொடங்கியுள்ளது. யூடியூபில் பதிவிட்ட மூன்றுநாட்களில் சுமார் 8 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்ததுடன் பல்லாயிரம் ‘லைக்’களையும் வாரிகுவித்துள்ள இந்த ‘டிரெண்டிங்’ வீடியோவைக் காண..,