28 நாட்களுக்கு ஒருமுறை வரும் மாதவிலக்கு பெண்களின் ஆரோக்கியமான தேகத்தையே குறிக்கிறது. அதே போல் வலியும் இயற்கையானதே.
இப்போது 10- 13 வயதுக்குள்ளாகவே பெண் குழந்தைகள் வயதிற்கு வருகிறார்கள். ஒரு சிலருக்கு இயல்பாக இருக்கும். சிலர் தாங்க முடியாத வலியினால் அவதிப்படுவார்கள். இதற்கு வலி குறைய மாத்திரைகள் எடுத்துக் கொள்வது பெருந்தவறு.
ஏன் வலி உண்டாகிறது?
மாத விடாய் சமயத்தில் இறுகிப்படித்திருந்த தசைகள் சுருங்கி உதிரப்போக்கு ஏற்படும்போது, கர்ப்பப்பை இறுகி, தசைகளில் வலியை உண்டாக்குகிறது. அவ்வாறு இறுகுவதால் கர்ப்பப்பையிலிருந்து அதிக ரத்தச் சசிவு உண்டாகாமல் தடுக்கப்படும். எனவேதான் அடிவயிற்றில் வலி உண்டாகும்.
முருங்கை இலை ஜூஸ் :
முருங்கை இலையில் அதிக இரும்புச் சத்து உள்ளது. அதோடு கால்சியம், மினரல் ஆகியவைகளும் இருக்கின்றன. இவை கர்ப்பப்பையை வலுப்படுத்தும் . வலியை குறைக்கும். ரத்த சோகை உண்டாகாமல் உடலை வலுப்படுத்தும். அதனை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.
தயாரிக்கும் முறை :
தேவையானவை :
முருங்கை இலை – கைப்பிடி அளவு தேன் – 1 ஸ்பூன் நீர் – கால் கப்
செய்முறை :
முருங்கை இலையில் நீர் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். பிறகு அதன் சாற்றை பிழிந்து எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி குடிக்கவும்.
எப்போது பருகலாம்?
மாத விடாயின் போது தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்தால் வலி குறைந்து தெம்பாக வலம் வருவீர்கள்