நீங்கள் இதுவரை உபயோகித்த எண்ணைய்களில் மிகவும் மென்மையான எண்ணைய் குழந்தை எண்ணெய் (பேபி ஆயில்) ஆகும். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னெவெனில் இதை நீங்கள் பலேறு நோக்கங்களுக்கும் பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய் பற்றிய குறிப்பிடத்தக்க மிக முக்கியமான அம்சம் என்னவெனில் இந்த எண்ணெயை மென்மையான தோல் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். நீங்கள் பேபி ஆயிலை பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிறிது கற்பனை செய்து பாருங்கள், பல நன்மைகளைத் தரும் ஒரு எண்ணெய்!
எனவே இதை பலரும் விரும்புவது ஆச்சர்யம் இல்லை தானே? மலிவு விலையில் கிடைக்கும் இந்த எண்ணைய் உங்களின் வீட்டிற்கு அருகில் உள்ளே அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றது.
இதைத்தவிர, பேபி ஆயில் நம்முடைய அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு அத்யாவசியப் பொருளாகும். அனைவருடைய் வீட்டிலும் தவறாது இடம்பெற்றிருந்தாலும், இதை பல்வேறு வகைகளில் எவ்வாறு உபயோகிப்பது என்பது நமக்கு தெரியாது. நீங்கள் உண்மையில் இது எந்தெந்த வழிகளில் உங்களுக்கு நன்மை அளிக்கும் என்பதை தெரிந்து கொண்டால் அது கண்டிப்பாக உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
எனவே, உங்களின் வீட்டில் பேபி ஆயில் இல்லை என்றால், நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள்? அந்த பாட்டிலை வாங்கி வைத்திருப்பது உங்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைக்காது. எனவே விரைந்து சென்று ஒரு பாட்டிலை அருகில் உள்ள கடையில் இருந்து வாங்கி வாருங்க்ள். நீங்கள் பேபி ஆயிலை உங்களின் பல்வேறு அழகுக் கலை குறிப்புகளில் உபயோகிக்கலாம். என்னென்ன வழிகளில் பேபி ஆயிலை உபயோகிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1. சவரம்:
ஆமாம், நீங்கள் பேபி ஆயிலைப் பயன்படுத்தி மிக எளிதாக எரிச்சல் இல்லாமல் சவரம் செய்யலாம். ஒரு முறை இதைப் பயன்படுத்திப் பார்த்தீர்கள் எனில் அதன் பிறகு வேக்ஸ் போன்ற பிற முடி நீங்ககும் சிகிச்சைகளை ஒரு பொழுதும் எண்ணிப் பார்க்க மாட்டீர்கள். எனவே ஒரு முறை இதைப் பயன்படுத்திப் பாருங்கள். அதன் பிறகு நீங்கள் பேபி ஆயிலை ஒரு பொழுதும் மறக்க மாட்டீர்கள்.
2. ஒப்பனை நீக்கி:
உங்களின் பட்ஜெட் விலையுயர்ந்த ஒப்பனை நீக்கிகளுக்கு இடம் கொடுக்கவில்லையா? கவலை வேண்டாம். நீங்கள் பேபி ஆயிலை ஒப்பனை நீக்கியாக பயன்படுத்திப் பாருங்கள். நாம் அனைவருக்கும் ஒப்பனை நீக்குவது எவ்வுளவு முக்கியம் எனத் தெரியும். இப்பொழுது நீங்கள் அதிகம் செலவு இல்லாமல் பேபி ஆயிலைப் பயன்படுத்தி உங்களின் ஒப்பனைகளை நீக்கி விடலாம்.
3. உடல் எண்ணெய்:
பேபி ஆயிலில் விட்டமின் ஈ அதிகமாக உள்ளது. எனவே இதை நீங்கள் குளிக்கும் முன் உங்களின் உடலில் இதைத் தடவி மசாஜ் செய்து கொள்வது உங்களின் தோலை வலுவாக்கும். நீங்கள் ஒரு மென்மையான தோலைப் பற்றி கனவு காண்பீர்களா? அப்பொழுது உங்களின் உற்ற தோழன் பேபி ஆயில் மட்டும் தான். இது ஒரு மென்மையான தோலுக்கு உத்திரவாதம் தருகின்றது.
4. முடி எண்ணெய்:
நீங்கள் உங்களுக்கு பிடித்த முடி எண்ணெய் தீர்ந்து விட்டது எனில் பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். நீங்கள் பேபி ஆயிலை உச்சந்த தலையில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். நீங்கள் பேபி ஆயிலின் பல்வேறு சாத்தியங்கள் கற்பனை செய்து பாருங்கள். பல பயன்பாடுகளை உள்ளடக்கிய ஒரு உன்னத தயாரிப்பு பேபி ஆயில் ஆகும். ஆமாம், நீங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம்.
5. ஈரமூட்டி:
நீங்கள் பேபி ஆயிலை ஒரு ஈரமூட்டியாக பயன்படுத்தலாம். நீங்கள் இதை மழைக் காலத்தில் இதைப் பயன்படுத்தி மழையினால் உங்களின் சருமம் வறண்டு போகாமல் தடுக்கலாம். பேபி ஆயிலின் இந்தப் பயன்பாடு வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
6. முக எண்ணெய்:
முக எண்ணெய்கள் இன்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. உங்களுக்கு உங்கள் முகத்திற்கு எந்த எண்ணையைப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை எனில் பேபி ஆயிலை பயன்படுத்திப் பார்க்கலாம். இது மிகவும் பாதுகாப்பானது, மற்றும் நிச்சயமாக இது உங்களைத் தவிக்க விடாது. முதல் நாள் இரவில் இதை உங்களின் முகத்தில் தடவி மறுநாள் மிகவும் பிரகாசமான மற்றும் மிருதுவான முகத்துடன் எழுந்து வாருங்கள்.