புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை இவ் வருடம் நிறைவு செய்யமுடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடமே அது நடைபெறும். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று விடயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். நான் ஒருதடவையே ஜனாதிபதியாக இருப்பேன் கூறியதில் எந்த மாற்றமும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.