2017ம் ஆண்டுக்கான அகதிகள் அனுமதிக்கும் எண்ணிக்கையை கனடா அரசு அறிவித்துள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ம் ஆண்டில் நாட்டில் 3 லட்சம் அகதிகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டும் இதே எண்ணிக்கையை தான் கனடா அறிவித்தது நினைவுக் கூரதக்கது.
நாட்டின் மக்கள் தொகை, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வருகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.