தாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?…

பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் பற்றி பேச கூச்சப்படுவார்கள், இதற்கு காரணம் அவர்கள் வளரும் குடும்பம் மற்றும் சமூகமே. சிறு பிள்ளையில் இருந்தே பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் தாம்பத்தியம் பற்றி எடுத்துக் கூறுவது அவசியம்.

அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் சிறுவயதில் இருந்தே பெண்களை காம பெருமூச்சுகளால் நசுக்கும் ஆண்கள் ஏராளம். தினம் ஒரு செய்தி இதுதொடர்பாக வந்துவிடுகிறது, இதையெல்லாம் கேள்விப்பட்டுக் கொண்டே வளர்வதால் என்னவோ தாம்பத்தியம் மீது பெண்களுக்கு ஒருவித வெறுப்பு உண்டாகிறது.

மேலும் மற்ற பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கூறுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமாக கணவன் இதை உடல் ரீதியான உறவாக பார்க்காமல் மனரீதியாக பார்ப்பதும் மிகவும் அவசியம்.

மனைவிக்கு விருப்பம் இல்லை என்றால் கட்டாயப்படுத்தக்கூடாது, புரிந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. சின்ன சின்ன கொஞ்சல்களும், செல்ல சண்டைகளும் தாம்பத்தியத்திற்கு மிக முக்கியமானவை.

மனைவியை குஷிப்படுத்த அவ்வப்போது வெளியில் அழைத்து செல்லுங்கள், அவர்களுக்கு பிடித்த விடயத்தை பற்றி பேசுங்கள். குறிப்பாக அவர்களிடம் மனம் விட்டு பேசுவது அவசியம், அவர்களுக்கு உறவில் இருக்கும் பிரச்னையை நீங்கள் புரிந்து கொண்டாலே சரிசெய்தாலே இல்லறம் சிறக்கும்.