பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம்

பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

பிரவசத்தின் போது கர்ப்பிணிகள் தங்களது மனோ திடத்தை வலுப்படுத்திக்கொள்ள தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு முதல் பெண் உதவியாளர் ஒருவரை கர்ப்ப்பிணிகள் பிரவசத்தின் போது அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும், 2011ம்ஆண்டு முதல் சுகாதார அமைச்சின் தந்திரோபாய திட்டத்தில் இந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து கர்ப்பிணிகளையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தை அனைத்து கர்ப்பிணிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.