நல்லாட்சி அரசாங்கத்தின் 10 மோசடி அமைச்சர்கள் யார்?

ரணில் – மைத்திரி அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 10 அமைச்சர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”டொப் 10” என்ற பெயரில் எதிர்வரும் புதன் கிழமை குறித்த அமைச்சர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தொடர்பாக ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களில் முறையிட நடவடிக்கையெடுக்கப்படுமென  கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக ஐக்கிய தேசிய கட்சியினதும் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் பிரபல அமைச்சர்கள் தொடர்பாகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் தகவல்கள் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.