ஊடகங்களுக்கு வரையறை வேண்டும்!

ஊடகங்கள் விளக்கமில்லாமல் வீணாக சப்தமிடுவதிலும் வரையறையொன்று தேவை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஊடகங்களை அழைத்து விளக்கமளிக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அஹங்கம பிரதேசத்திலுள்ள விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டரசாங்கத்தில் இரு பெரும் கட்சிகள் இணைந்து செயற்படுவது ஊடகங்களுக்கே இன்று பெரும் பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கம் இன்று விழும் நாளை விழும் என ஊடகங்கள் எதிர்பார்த்துள்ளன.

இந்த அரசாங்கம் 5 வருடங்களுக்கு விழாது என்பதை ஊடகங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் கொண்டிருக்கின்ற கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இருபெரும் கட்சிகள் இணைந்து செயற்படுவதன் பிரதிபலன் அடுத்த வருடத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும். இதனை விளங்காதவர்கள் அரசாங்கம் விழும் எனக் கனவு காண்கின்றனர் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.