சிலர் தாஜூடீன் விசாரணையை குழப்புவதற்கு முயற்சி!

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான விசாரணையை குழப்பியடிக்க சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆங்கில நாளிதழொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை தொடர்பான உண்மைத் தன்மையை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.

இதுகுறித்த விசாரணைகளை துரிதமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டும், மந்த கதியிலும் செல்கின்றனர்.

குறிப்பாக அவன்ட் கார்ட் விவகாரத்தில் துப்பாக்கிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் அதன் தொடர் இலக்கங்கள் அழிந்துவிட்டதாக அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை தெரிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்றே நான் வலியுறுத்தி வந்தேன்.

அதனை சில ஊடகங்கள் திரிபுபடுத்தி விசாரணையை விமர்சிக்கின்றது. செய்திகளை வெளியிட்டு சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.