இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.
இதேவேளை, விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கோரி இன்று(07) கொழும்பு கோட்டை பொலிஸார் கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
குறித்த கோரிக்கை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை வீதியில் கடும் வாகன நெரிசல் எற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.