பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஆயுள் முழுவதும் பலவித பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். பருவ வயதினில் தொடங்கி மாதவிடாய் முடியும் வரை அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். அதுவும் 50 வயதிற்கு பின் மெனோபாஸ் நிற்கும் சமயத்தில் ஹாட் ஃப்ளாஷ் வருவதுண்டு.
ஹாட் ஃப்ளாஷ் :
மாதவிடாய் நிற்கும் சமயத்தில் உண்டாகும் அறிகுறியே ஹாட் ஃப்ளாஷ். படபடப்பு, தோல் வறட்சி, மன உளைச்சல், உடலில் திடீர் வெப்பம் உருவாதல். தொடர்ந்து சில்லிடும் நிலை உருவாதல். இதனால் காரணம் தெரியாத பயம், திடீரன அதிக வியர்த்து கொட்டுதல் இதனால் பாதிக்கப்பட்டு தூக்கம் தடைபடும். மெனோபாஸ் மட்டுமா காரணம் இது மெனோபாஸ் நிற்கும் சமயத்தில் வரும் அறிகுறிகள். அதனை தடுக்க நல்ல மகிழ்ச்சியான மன நிலை மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் போதும். ஆனால் மெனோபாஸ் தவிர வேறு காரனங்களாலும் இந்த பிரச்சனை உண்டாகும் . எவையென பார்ப்போம் .
அதிக மாத்திரைகளின் பக்க விளைவு :
மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்காக மாத்திரை எடுத்துக் கொள்பீர்களென்றால் இதன் பக்க விளைவாலும் ஹார் ஃப்ளாஷ் வருவதுண்டு.
உடல் பருமன் :
உடலிலுள்ள அளவுக்கதிகமான கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றது. இது ஹார் ஃப்ளாஷை உண்டு பண்ணும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவு அலர்ஜி :
பால், வேக்கடலை போன்ற உணவு அலர்ஜி இருப்பவர்களுக்கு ஹாட் ஃப்ளாஷ் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதுபோல் அதிக மது, காஃபியும் ஹாட்ஃப்ளாஷை உண்டாக்கும்.
ஹார்மோன் பாதிப்பு :
உடலில் ஏதாவது ஹார்மோன் ஒழுங்காக செயல்படாமல் பிரச்சனை உண்டானால் ஹாட் ஃப்ளாஷ் வர வாய்ப்புண்டு.
குறிப்பாக தைராய்டு ஹார்மோன் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்.