“சினிமா ஒரு கலை, ஒரு தொழில். திருமணம் ஆன பெண்களையும், திருமண நிச்சயதார்த்தம் நடந்த பெண்களையும் எனக்கு பிடிக்கும். எல்லா பெண்களையும் நேசிக்கிறேன். அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களையும், அவர்களுடைய பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. இது எனக்குள்ள ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை திரும்பத் திரும்பச் செய்வதால்தான் எனக்கு தீர்வு கிடைக்கிறது.
காதலின் அனைத்துப் பக்கங்களையும் எனக்கு தெரியும். அது வினோதமானது. பெண்களை நேசிக்கும் ஒருவர் ஷேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களையும் விரும்பும் ஒருவராகவோ, சினிமாவை பற்றி அனைத்தும் தெரிந்த ஒருவராகவோ இருக்கலாம். நானும் அப்படிப்பட்ட ஒருவன்தான். எனது அழகு, உடல் சார்ந்தது மட்டுமல்ல. நான் உங்களை சிரிக்கவோ, அழவோ வைக்கும் போது ஏற்படும் கவர்ச்சியிலும் நேசம் உள்ளது. எனக்காக உங்களை இயங்க வைக்கும் போதும், உங்களுக்காக ஏங்கி நிற்கும்போதும் அதை நான் சிறப்பாக செய்கிறேன்.
நான் காதலில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். எனவே எப்போதும் பெண்களிடம் எனது நேசம் இருக்கும்” என்றார்.