உடல் எடையை குறைக்கும் முயற்சியில் லட்சுமி மேனன்

லட்சுமிமேனன் ‘கும்கி’ படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 14. அப்போது 9-வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த படம் வெற்றி பெற்ற பிறகு ‘சுந்தரபாண்டியன்’,‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘வேதாளம்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

எல்லா படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. ‘மிருதன்’, ‘றெக்க’ படங்களுக்கு பிறகு லட்சுமிமேனன் எடை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே இவரிடம் கதை சொன்னவர்கள் “ உடம்பு குண்டாகி விட்டதே….” என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் தனது பட வாய்ப்புகளுக்கு பிரச்சினை வரலாம் என்று நினைத்த லட்சுமிமேனன், எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். “விரைவில் பழைய நிலைக்கு திரும்புவேன்” என்று கூறி வருகிறார்.