அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நியூ டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற கிராமம் நள்ளிரவில் தொடங்கி வைத்துள்ளது.
இந்த கிராமத்தில் மொத்தம் 12 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அமெரிக்க நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இப்பகுதி மக்கள் வாக்களிப்பார்கள். அதன்படி இந்த கிராம மக்கள் வாக்குப்பதிவு தொடங்கி, அதற்கான முடிவையும் அறிவித்துள்ளனர்.
மொத்தம் 8 பேர் வாக்களித்த நிலையில் 4 வாக்குகள் ஹிலாரிக்கு கிடைத்தன. 2 வாக்குகள் டிரம்புக்கு கிடைத்தன.
நான்கு ஓட்டுகளுடன் ஹிலாரி முதலிடத்திலும், இரண்டு ஓட்டுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், ஒரு ஓட்டுடன் கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
நியூ டிக்ஸ்வில்லியில் வெற்றி பெற்றவர்கள்தான் 2000, 2004 மற்றும் 2008 தேர்தலில் அதிபர் ஆகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.