தனுஷ், த்ரிஷா, அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ‘கொடி’ திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
தனுஷின் வெற்றி பட பட்டியலில் இணைந்துள்ள இந்த படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.31.5 கோடி வசூல் செய்துள்ளது.
சென்னையில் ரூ.2.98 கோடியும், செங்கப்பட்டில் ரூ.6.2 கோடியும், கோவையும் ரூ.5.2 கோடியும், திருநெல்வேலி பகுதியில் ரூ.1.5 கோடியும் வசூல் செய்துள்ளது.
ரிலீசுக்கு முன்பே தனுஷ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த படத்திற்கு செய்த புரமோஷனும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் இந்த படம் நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மொத்தத்தில் இந்த படத்தை வெளியிட்ட அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.