பிரித்தானியாவில் நாஜி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் மனைவி எவா பிரான் பயன்படுத்திய பொருட்கள் நல்ல விலைக்கு ஏலம் போயுள்ளன.
இங்கிலாந்தின் Malvern நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் ஹிட்லர் மனைவி எவா பிரானின் பல பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் அவருடைய இரு இளஞ்சிவப்பு நிற உள்ளாடை அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.
இத்துடன் அவருடைய தங்க மோதிரம், வெள்ளிப் பெட்டி மற்றும் வெள்ளிப் பிடி கொண்ட அவருடைய லிஃப்ஸ்டிக் ஆகியவையும் நல்ல விலைக்கு ஏலம் போனது.
இவை அனைத்தும் ரூ.35,000 விலைக்கு தான் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட 7 மடங்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் பிரித்தானியாவின் முக்கிய பிரமுகர் ஒருவர் ஆசைப்பட்டு வாங்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, எவா பிரானின் அவருடைய கணவர் ஹிட்லருடன் இருக்கும் பல கருப்பு வெள்ளை நிற புகைப்படங்களையும் பலர் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றுள்ளனர்.