ஆப்பிள் ஆனது கணணி மற்றும் மொபைல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது.
இந் நிறுவனமானது தனது உற்பத்திப் பொருட்களின் துணைச் சாதனங்களில் அனேகமானவற்றினை சீனாவில் வைத்தே தயார் செய்கின்றது.
இதற்கு காரணம் உற்பத்தி செலவு குறைவென்பதாகும்.
இந் நிறுவனத்தின் சாதனங்களை விற்பனை செய்வதற்கு மிகப் பெரிய சந்தையாக இந்தியாவும் காணப்படுகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு தற்போது ஐபோன் மற்றும் ஐபேட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு தயாராகிவருகின்றது.
இம் முயற்சியினை கடந்த மூன்று வருடங்களுகளாக ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இதற்கு இந்தியாவின் 30 சதவீத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இதற்கான தகுதியை தற்போதுதான் அந் நிறுவனம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசுடன் ஒப்பந்தத்தினை மேற்கொள்ள தயாராகிவருகின்றது.
இம் முயற்சியின் காரணமாக ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வசதி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.