இளையதளபதி விஜய் இன்று சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். ஆனால் இவர் மீது சில வதந்திகள் வரத்தான் செய்கின்றன.
இவருடன் நடிக்க வேண்டும், இவரை பார்க்க வேண்டும் என்பது பலரின் ஆசை. 2008 இல் இவரோடு குருவி படத்தில் டன்டான டர்னா பாடலில் நாடன் மாடியவர் மாளவிகா.
இன்னும் சொல்லப்போனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நடிகையாகவும், கேமியோ ரோலிலும், நடனத்திலும் திறமை காட்டியவர்.
கானா உலகநாதன் பாடிய வால மீனு பாடலில் நடனமாடியவர். 2009 க்கு பிறகு திருமணம், குடும்பம் , குழந்தைகள் என இருந்தவர் சினிமாவை விட்டு தள்ளியிருந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவிற்கு வர முயற்சி எடுத்துவருகிறார். ஹீரோயினாக அல்ல, அக்கா,அண்ணி, வில்லி கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க என்று தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளாராம்.
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருக்கு பிடிச்ச மாதிரி கேரக்ட்டரு அமையுமா?