ஒருவருடைய மரணம் எப்போது எப்படி வரும் என்று எவராலும் அவ்வளவு இலகுவாக கூறிவிட முடியாது. அப்படியிருக்கையில் மரணத்தின் விழிம்புக்கு சென்று மீண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதே போன்றே சிறுமி ஒருவர் வீதியில் தனியாக நடந்து சென்றுள்ளார். எப்போதுமே அவ் வீதியால் செல்பவர்கள் அனைவரும் மிகவும் பிஸியாகவே இருப்பார்கள். இதனால் அச் சிறுமி தனியாக செல்வதை எவரும் கண்டிருக்கவும் இல்லை, பெரிதுபடுத்தவும் இல்லை.
இப்படியிருக்கையில் அச் சிறுமி தவறி தரையில் விழுந்துள்ளார். இதன்போது அவ் வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்று சிறுமிக்கு மேலாக சென்றுள்ளது. எனினும் கார் செல்லும் வரை சிறுமி எழாது இருந்தமையால் உயிர் பிழைத்துள்ளது.