சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
லைகா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருட தீபாவளி தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தின் ரொமான்ஸ் பாடல் ஒன்றை பிரிட்டன் பாடகர் அர்ஜூன் குமாரசாமி அவர்களை பாட வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த தகவல் ‘2.0’ படத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வரும் 20-ம் திகதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.