இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.
சிம்பாப்வே அணியின் சார்பில் செரி 80 ஓட்டங்களையும், எர்வின் 64 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுகளையும், டில்ருவான் பெரேரா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இதேவேளை இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 504 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 232 ஓட்டங்கள் முன்னிலைப்பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.