கடந்த மாதம் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் தேவி.
இந்த படத்தை இயக்குனர் எ.எல்.விஜய் இயக்கி இருந்தார், இந்த படத்தை நடிகர் பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா மற்றும் ஐசரிகணேஷ் இணைத்து தயாரித்திருந்தனர்.
இந்த படத்தில் நாயகனாக, பிரபுதேவா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடித்திருந்தார், இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் சோனு சூட் , ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடித்திருந்தனர்.
பேய் படமாக உருவான இந்த படம், தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்க பட்டது. மூன்று மொழிகளிலும் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளதால் இதை சிறப்பிக்கும் விதமாக.
வெற்றி விழா ஒன்றை ஐசரிகணேஷ் ஏற்பாடு செய்திருந்தார் இந்த விழாவில் , தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால்,பிரபு , பார்த்திபன், மீனா , சங்கீத என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் எழுதிய நா. முத்துக்குமார்ரை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு ஷீல்டு வழங்கப்பட்டது. இதை அவரது மகன் ஆதவன் பெற்றுக்கொண்டான்.
இந்த நிகழ்வின் போது அரங்கில் இருந்த அனைவரும் முத்துக்குமாரின் மகன் ஆதவன் பெற்று கொண்ட ஷில்டை எழுத்து நின்று கெரவப்படுத்தினர்.