இளைய தளபதி விஜய் என்றாலே ஒரு அமைதியான முகம் தான் நியாபகம் வரும். ஆனால், அவருடன் பணியாற்றியவர்கள் அனைவரும் சொல்வார்கள் அவர் எத்தனை ஜாலியான மனிதர் என்று.
இந்நிலையில் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் செம்ம ஹிட் அடித்த படம் துப்பாக்கி, கத்தி. இதில் கத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக முருகதாஸ் ஒரு வானொலி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அப்போது விஜய் போன் செய்து தன் பெயரை சொல்லாமலேயே ‘அண்ணா விஜய் சார் பற்றி சொல்லுங்க, எப்படி இவ்ளோ நல்ல படம் எடுக்குறீங்க’ என பேசினார்.
முருகதாஸும் சில நேரம் யார் என்று தெரியாமல் பேசி பிறகு ‘சார் நீங்க தானா’ என சத்தமாக சிரித்து செம்ம கலாட்டாவாக முடிந்தது அந்த நிகழ்ச்சி.