இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர் நயன்தாரா.
அதை தொடர்ந்து வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார், அப்போது நயன்தாரா மார்க்கெட் வேறு, தற்போது வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
நயன்தாரா இதை வைத்தே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டுவிட்டாராம், அது என்னவென்றால் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தால், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.