தொப்பைக்கான காரணம்? குறைக்க என்ன செய்யலாம்

இன்றைய காலத்தில் மக்களை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடற்பருமன்.

உடல் பருமனாக இருந்தாலே நோய்கள் தானாக வந்து ஒட்டிக் கொள்ளம், குறிப்பாக இருதய நோயின் ஆபத்துகள் அதிகம்.

இதற்கான காரணங்கள் என்னவென்றால்,

  • பலர் அவர்கள் அறியாமலேயே நிறைய சர்க்கரையினை உணவில் எடுத்துக் கொள்கின்றனர். கேக்குகள், மிட்டாய்கள், சோடா, பானம் என அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது ஃப்ரக்டோஸ் பிரிவு அதிகம் உடலில் சேருகின்றது. 25 சதவீத வயிற்றுப் பருமன் உடையோர் இதன் காரணத்தினாலே இத்தகைய பாதிப்பினை அடைகின்றனர்.
  • அது மட்டுமில்லாமல் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் ஆல்கஹால் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆரோக்கியம் கெடுவதுடன் கல்லீரல் பாதிப்படைவது தான் மிச்சம்.
  • எப்போதும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும்.
  • சுறுசுறுப்பாக இல்லாது பல மணி நேரம் உட்கார்ந்தே நாளை கடத்துபவர்களுக்கும் தொப்பை ஏற்படும்.
  • புரத உணவு குறையும் பொழுது அல்லது புரத உணவு அதிகம் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் பருத்த வயிறு ஏற்படும். குறைந்த புரதம் அதிக பசியினை ஏற்படுத்தும், இதன் காரணமாகவே அதிக உணவு உட்கொள்ளுதலும், வயிறு பருத்தலும் ஏற்படும்.
  • மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்டிரஜன் ஹார்மோன் அளவு குறையும் காரணத்தினால் தொடை, இடுப்பு பகுதிகளில் சேரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர ஆரம்பித்து விடுகின்றது. சிலருக்கு இது பரம்பரை காரணமாகவும் இருக்கலாம்.
  • நமது குடலில் நூறு வகையான பாக்டீரியாக்கள் இருக்கும். பல நமக்கு நன்மை பயக்கும். பல நமக்கு தீமை பயக்கும். இவற்றின் சமநிலை மாறும் பொழுது தீய பாக்டீரியாக்களால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நீரிழிவு, இருதய, புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் கூடும்.

அது சரி இப்படி பெருத்த வயிற்றினை குறைப்பது எப்படி

  • நார்சத்து உணவினை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
  • மது பழக்கம் வேண்டாமே.
  • புரதம் நிறைந்த உணவு அவசியம்.
  • மனஉளைச்சலை தவிருங்கள்.
  • அதிக சர்க்கரை உணவுகள், இனிப்புகளை சாப்பிடாதீர்கள்.
  • ஏரோபிக் வகையான உடற்பயிற்சியும், யோகாவும் வயிறு பருமன் குறைய வெகுவாய் உதவுகின்றது.
  • மைதா, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி இவைகளை அடியோடு தவிருங்கள்.
  • சிறிதளவு தேங்காய் எண்ணையினை உங்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். 30 மி.லி. வரை எடுத்துக் கொள்ளுங்கள். இது கொழுப்பினை வேகமாய் கரைக்கின்றது.
  • ஆனால் மற்ற கொழுப்பு எண்ணைகளை இதனோடு சேர்த்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் தேங்காய் எண்ணையே அதிக கலோரி சத்து கொண்டது.