தற்போதைய விஞ்ஞான உலகில் செல்போன் என்பது நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது. படுக்கும்போதும் செல்போனை பக்கத்தில் வைத்து படுப்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரு பழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் படுக்கையில் வெகுநேரம் படுத்துக்கொண்டே செல்போனை நோண்டுவது, தூங்கும்போது அருகில் செல்போன் வைத்திருப்பது ஆகியவை உடல்நலத்திற்கு பயங்கர தீங்கானது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக கருவுற்ற பெண்கள் படுக்கையில் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பெண்கள் செல்போனால் தங்கள்து தூக்கத்தை இழப்பதாகவும் இதன் காரணமாக பல புதுப்புது வியாதிகள் அவர்களுக்கு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.