சுட்டெரிக்கும் இந்த வெயிலில் கூட சிலரால் ஐஸ் கிரீம், குளிர்ச்சியான நீர் பருக முடியாது, காரணம் சென்சிட்டிவிட்டி. உங்களுக்கும் இந்த பல் கூச்சம் பிரச்சனை இருக்கிறதா?
கண்ட டூத் பேஸ்ட், மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு. சில எளிய முறைகளை பின்பற்றினாலே இந்த பல் கூச்சத்தில் இருந்து வெளிவந்துவிட முடியும். சோடா பானங்கள், காபி, ஆல்கஹால் போன்றவற்றை அதிகம் பருகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஸ்பெஷல் டூத் பேஸ்ட் என்று கண்டதை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை பல் பொடிகளை பயன்படுத்த துவங்குங்கள். தானாக பல் கூச்சம் குறைந்துவிடும்….
டிப்ஸ் #1
அசிடிட்டி உணவுகளை தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக குளிர்ச்சியான பானங்கள், ஊறுகாய், ரெட் ஒயின் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
டிப்ஸ் #2
பற்களை அரைத்துக் கொண்டே இருக்க வேண்டாம். சிலர் அதிகமாக சாப்பிடுவது, பற்களை கடித்துக் கொண்டே இருப்பதும் கூட பற்களின் வலிமை மற்றும் எனாமல் பாதிக்க காரணியாக இருக்கின்றன.
டிப்ஸ் #3
முக்கியமாக கண்ட டூத்பேஸ்டை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை பற் பொடிகளை பயன்படுத்துங்கள் பற்கள் நல்ல ஆரோக்கியம் பெறும்.
டிப்ஸ் #4
காஃபைன், ஆல்கஹால், புகை போன்ற பற்களில் சேதம் உண்டாக்கும் பழக்கங்களை கைவிட்டு விடுங்கள்.
டிப்ஸ் #5
பல் துலக்கும் போது வேகமாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம் மென்மையாக டூத் பிரஷை பயன்படுத்துங்கள். டிப்ஸ் #6 பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தம் வருவது போன்று இருந்தால், உடனே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.