விட்டமின் டி குறைஞ்சா இந்த புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறதாம் !!

விட்டமின் டி மிக முக்கியமான விட்டமின். இது கால்சியம் பாஸ்பரஸ் உடலுக்கு உறிய தேவை. இந்த விட்டமின் கால்சிட்ரையால என்ற ஹார்மோனாக மாறி கால்சியம் மெட்டபாலிசத்தை ஒழுங்குபடுத்தும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. விட்டமின் டி சத்து குறைந்தால் இதய நோய், எலும்பு பலவீனம், மரபியல் ரீதியான நோய்கள் , புற்று நோய் என பல ஆபத்து சூழக் கூடும். இன்னும் சிறிது விரிவாக படியுங்கள்.

விட்டமின் டி எங்கே கிடைக்கும் :

விட்டமின் டி எளிதில் கிடைக்கக் கூடியது. தேடி பிடித்து சமைத்து சாப்பிட தேவையில்லை. வீடு தேடி வரும் சூரிய ஒளியில் நின்றாலே போதும். அதோடு முட்டையின் மஞ்சள் கரு, மீனிலும் இருக்கிறது.

எவ்வாறு அதன் சத்து தூண்டப்படுகிறது?

சூரிய புற ஊதாக்கதிர்கள் தோலின் மீது படும்போது கொலஸ்ட்ராலிருந்து விட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. இந்த உருவாக்கப்பட்ட விட்டமின் டி நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது.

நோய் எதிர்ப்பு செல் புற்று நோயை தடுக்கும் :

தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு செல்கள் அசாதரண செல்களை அடையாளம் கொள்கிறது. இதனால் அசாதரண செல் புற்று நோய் செல்லாக மாறாமல் தடுக்க முடியும்.

ஆராய்ச்சி :

மேற்சொன்னவையெல்லாம் உடலிலுள்ள மெல்லிய பையை ( bladder ) ஆராய்ச்சி செய்த போது தெரிய வந்தவை. பிளேடரில் இருக்கும் எபிதீலியல் செல்கள் விட்டமின் டியை உற்பத்தி செய்கின்றன். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகின்றன என்று தெரியவந்துள்ளது.

விட்டமின் டி குறைவின் போது :

விட்டமின் டி குறையும்போது , நோய் எதிர்ப்பு எதிர்ப்பு செல்கள் மிகக் குறைவாகவே செயல்பட்டதால், பாதிக்கப்பட்ட பையில் அசாதரண செல்கள் உருவாகி புற்று நோயாக மாறியது என தெரியவந்துள்ளது.

பிளேடர் புற்று நோய் :

ஆகவே விட்டமின் டி குறைபாட்டினால் பிளேடர் பாதிக்கப்பட்டு அதனால் புற்று நோய் உருவாகும்வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏழில் 5 ஆய்வுகளில் உறுதி:

இதனைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் 7 விதமான ஆய்வுகள் நடத்தினர். அதில் 5/7 ஆய்வுகளில் விட்டமின் டி குறைந்தவர்களுக்கு ப்ளேடர் புற்று நோய் வந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.