இலங்கையில் பிடிக்கப்பட்ட 17 அடி நீளமான இராட்சத முதலை!

நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய ஊர்வன இனத்தைச் சேர்ந்த முதலையானது மிகவும் கொடிய உயிரினமாகும். இது மழைக் காலங்களில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்வதுடன், சில சமயங்களில் கிராமப் புறங்களுக்கும் படையெடுக்கும்.

அண்மையில் இலங்கையின் மாத்தறைப் பிரதேசத்தில் உள்ள நில்வள கங்கை பகுதியில் 17 அடி நீளமான இராட்சத முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இம் முதலையானது கால்வாய் ஒன்றினுள் சிக்கி மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

எனினும் வன விலங்கு அதிகாரிகளினால் மீண்டும் குறித்த இராட்சத முதலை நில்வள கங்கையில் விடப்பட்டுள்ளது.