சிறிய கார்களை விற்பனை செய்வதற்கு வாகன விற்பனையார்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வரவு செலவு திட்டத்தின் பின்னர் சிறிய வாகனங்களின் வரி குறைய கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெரியளவிலான தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுசுகி வாகனங்களை விற்பனை செய்யும் எஸோசியஸ் மோட்டர்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 2 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்க ஆரம்பித்துள்ளது.
சிறிய பென்டா கார்களை விற்பனை செய்யும் மைக்ரோ நிறுவனம் தங்களின் வாகனத்தின் விலையை ஒரு லட்சம் அளவில் குறைத்துள்ளது.
பொதுவாக கார் விற்பனையாளர்கள் வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் வரி அதிகரிக்க கூடும் எனவும் தற்போதே கொள்வனவு செய்துக் கொள்ளுமாறும் கூறுவார்கள். எனினும் இம்முறை அவர்கள் அமைதியாக உள்ளனர்.
அதிகமானோர் கார் கொள்வனவு செய்துக் கொள்ள கூடிய வரி முறையை முன்வைப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமையே இந்த அமைதிக்கு காரணம் என கூறப்படுகின்றது.
எப்படியிருப்பினும் cc10000க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்டுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
Toyota Premio, Toyota Allion and Honda Vezel – வாகனங்களின் விலைவில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து 220,000த்தில் இருந்து 384,000வரை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு காரணமாக உற்பத்தியாளர்களினால் விலை அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.